தேடல்

கரும்பு, மஞ்சள் வரத்து அதிகரிப்புவிலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி

விருத்தாசலம்:விருத்தாசலத்தில்

பன்னீர் கரும்பு, மஞ்சள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்ததால், வியாபாரிகள்

போட்டி, போட்டு கூவி கூவி விற்பனையில் ஈடுபட்டனர்.
உழவர்களின் திருவிழா

வான பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். பொங்கல் என் றதும்

நமக்கு நினைவுக்கு வருவது, கரும்பு, மஞ்சள், மண் பானைகள்தான்.பொங்கல்

பண்டிகையின் போது வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி, புதிய பானையில்

கிழங்குடன் கூடிய மஞ்சள் செடிகளை கட்டி, பொங்கல் வைத்து, பூசனி, வல்லிக்

கிழங்குகள் சமைத்து, சூரியனுக்கு படையல் செய்வது வழக்கம்.

பொங்கல்

பண்டிகைக்காக பெண்ணாடம், சேத்தியாதோப்பு பகுதிகளில் அறுவடை செய்த பன்னீர்

கரும்புகள் விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் முதல் விற்பனைக்கு குவிந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் விற்பனையில்

மும்முரமாக ஈடுபட்டனர். கரும்பு வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்தாண்டைவிட

இந்தாண்டு விலை குறைவாக இருந்தது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 200 முதல்

250 ரூபாய் வரை விற்பனையானது. கடந்தாண்டு 350 முதல் 500 ரூபாய் வரை

விற்பனையானது.மஞ்சள் கொத்து 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையானது.

விருத்தாசலம் மார்க்கெட்டிற்கு மஞ்சள், கரும்பு வரத்து அதிகரித்ததால்,

வியாபாரிகள் போட்டி, போட்டு கூவி கூவி விற்பனையில் ஈடுபட்டனர். குறைந்த

விலையில் கரும்பு, மஞ்சள் விற்பனையானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.