தேடல்

கருவந்தாவில் நாராயணசாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

வீரகேரளம்புதூர்

: தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாராயணசாமி நாயுடு நினைவஞ்சலி

கருவந்தாவில் அனுஷ்டிக்கப்பட்டது.தொடர் போராட்டங்களின் மூலம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத்தந்தவரும், சுதந்திரபோராட்ட

தியாகியுமான நாராயணசாமி நாயுடுவின் 28வது நினைவஞ்சலி கருவந்தாவில்

அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் சங்க ஆலங்குளம் ஒன்றிய

தலைவர் பொன்னுதுரை தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் அன்புராஜ், மாவட்ட

தலைவர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு மருதப்பாண்டியன்

முன்னிலை வகித்தனர்.கருவந்தா கிளைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட

செயலாளர் மாடசாமி, ஒன்றிய தலைவர்கள் மேலநீலிதநல்லூர் ராமலிங்கம், தென்காசி

கந்தசாமி, சங்கரபாண்டித்தேவர், சுப்பையாபாண்டியன், சுடலைகனி, ராதாகிருஷ்ணன்

உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருவந்தா

கிளை செயலாளர் மரிய ஜோஸ் நன்றி கூறினார்.கூட்டத்தில் விவசாயிகளுக்காக

பாடுபட்ட நாராயணசாமி நாயுடுவுக்கு தபால் தலை வெளியிடவும், நெல்லை மாவட்ட

கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அவர் பெயர்

சூட்டவும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி முதியோர் உதவித்தொகை

வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.