தேடல்

கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை:தந்தைக்கு வெட்டு: ராணுவவீரர் வெறிச்செயல்

திருநெல்வேலி:காதல் தகராறில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் தேடிவருகின்றனர்.திருநெல்வேலி, ஆலங்குளத்தை அடுத்துள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. ஆட்டோ டிரைவர். இவரது மகள் பிரேமா 23. நெல்லை, பெண்கள் கல்லூரியில் பி.காம்.,முடித்தவர், தற்போது பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) முதுகலை பயின்றுவந்தார்.மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் செல்லத்துரையின் மகன் மணிகண்டன், ராணுவத்தில் பணியாற்றிவரும் அவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்தஊர் வந்துள்ளார்.மாலை மாணவி பிரேமா, கல்லூரி முடிந்துவருவதை கவனித்த, மணிகண்டன், அவரை வீட்டுவாசலில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் தலைதுண்டிக்கப்பட்டு மாணவி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சம்பவம் அறிந்து மாணவியின் தந்தை பெரியசாமி அங்கு ஓடிவந்தார். அவரையும் மணிகண்டன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டார்.பலத்த காயமுற்ற பெரியசாமி, நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அடுத்தடுத்த வீடு என்பதால், பிரேமாவை, மணிகண்டன் ஒரு தலையாக காதலித்திருக்கலாம் எனவும் காதலுக்கு பிரேமா மறுத்துள்ள நிலையில் அவரை கொலை செய்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய மணிகண்டனை, ஆலங்குளம் போலீசார் தேடிவருகின்றனர்.