தேடல்

களத்தில் மோதல்: கால்பந்து ரெப்ரி மரணம்

ஹக்:கால்பந்து வீரர்கள் தாக்கியதில், போட்டியின் நடுவர் மரணமடைந்தார்.நெதர்லாந்தில் உள்ள ஹக்கில் ஜுனியர் கால்பந்து போட்டி நடந்தது. இதன் லைன் ரெப்ரியாக நெதர்லாந்தின் ரிச்சர்டு நியூவென்ஹுய்ஜன், 41, செயல்பட்டார். அப்போது தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால், ஆம்ஸ்டர்டாம் கிளப் நியூ ஸ்லோடன், ரிச்சர்டுவை தாக்கி, உதைத்தார்.பின் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்ட ரிச்சர்டு மரணம் அடைந்தார். இதற்கான சரியான காரணம் எதுவென்று அறிவிக்கப்படவில்லை.இது தொடர்பாக, 15 முதல் 16 வயதுடைய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.