தேடல்

கவர்ச்சியில் கல்லா கட்டும் மோனிகா!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மோனிகா, தங்கர்பச்சானின் அழகி படத்தில் சின்ன வயது நந்திதாதாஸாக நடித்தார். என்றபோதும் அதன்பிறகு பெரிய அளவிலான வாய்ப்புகள் அவர் வீட்டுக்கதவை தட்டவில்லை. அதனால் தவித்துப்போன மோனிகா, சிலந்தி என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பு கூட்டினார். ஆனால் அதன்பிறகு அந்த படம் தனது இமேஜை கெடுத்து விட்டதாக சொல்லி மீண்டும் கவர்ச்சிக்கதவுகளை இறுக மூடிக்கொண்டார். இதன்காரணமாக, அடுத்தடுத்து அவரை தோலுரிக்கவே நினைத்த இயக்குனர்கள் அவரது கண்டிசன்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் மோனிகாவின் மார்க்கெட்டும் படு மந்தமாகி விட்டது.

ஆனால், தற்போது கன்னட படங்களில் சூடுகாட்டி வருகிறார் மோனிகா. அங்கு ரமேஷ்அரவிந்துடன் நடிக்கும் கல்லா மல்லா கள்ளா என்ற படத்தில் சிலந்தி படத்தையே தூக்கி சாப்பிடும் வகையில் துகிலுரிந்து நிற்கிறாராம். கன்னட சினிமாவைப்பொறுத்தவரை புதுக்கவர்ச்சி என்பதால் புதிய படங்களுக்காக மோனிகாவை மாறி மாறி புக் பண்ணி விட்டார்களாம். அதனால் இதுதான் தருணம் என்று தனது படக்கூலியையும் கடுமையாக உயர்த்தி கல்லா கட்டி வரும் நடிகை, பெங்களூரில் வீடு பிடித்தும் குடியேறியிருக்கிறார்.