தேடல்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: குலாம் நபி ஆசாத்

ஐதராபாத் : காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக மத்தியிலும் ஆந்திராவிலும் ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து விடவில்லை எனவும், 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் பெற்ற வெற்றியை திரும்பவும் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசாத் ‌பேச்சு : @@காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களுக்கான விவகார பொறுப்புக்களை கவனித்து வரும் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து மக்களிடம் பேசி வருகிறார். இது தொடர்பாக ஐதராபாத் சென்றுள்ள குலாம் நபி ஆசாத், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
அனைவரும் காங்கிரஸ் இன உணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்; அவ்வாறு செயல்பட்டால் காங்கிரசை யாராலும் தோற்கடிக்க முடியாது; இதுபோன்ற கட்சி கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்த வேண்டும்; கட்சி பணியில் அனைத்து தொண்டர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு ஒற்றுமை, நம்பிக்கை, ஒருங்கிணைப்புடன் செயல்படாவிட்டால் நம்மால் வெற்றி பெற முடியாது; 2004ம் ஆண்டு செய்ததை போன்று தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய வரலாறு படைக்க அழைப்பு:@@
கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் குலாம் நபி ஆசாத் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். இது போன்ற முயற்சிகள் டில்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் மற்றும் அனைத்து தரப்புக்களிலும் தேவை எனவும், காங்கிரஸ் கட்சியினரின் முயற்சிகள் அனைத்து தரப்பு மக்களை கவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி கட்சியின் வலிமையை நிரூபித்து புதிய சாதனையையும் புதிய வரலாற்றையும் படைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டார்.