தேடல்

காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை: மதுரை அழகப்பன் நகரில் உள்ள அன்னை தெரசா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆர்.என்.டி.சி.பி.சார்பில் பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு துணை இயக்குனர் டாக்டர் எம்.எம்.சாமி, கல்லூரி தாளாளரும், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கழக மாநில செயலாளருமான டாக்டர் ஆர்.கண்ணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்