தேடல்

குஜராத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறுகிறது பா.ஜ.,; காங்.,க்கு இமாச்சல் ; கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: குஜராத்மாநிலத்தில் பா.ஜ.,மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., தனது ஆட்சியை இழக்கும் எனவும், அங்கு காங்., வெற்றி பெறும் எனவும்கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. டிசம்பர் 13ம் தேதியும், இன்று இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்தது.இன்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 70 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது.இதில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா அல்லது காங்., ஆட்சியை கைப்பற்றுமா எனபரபரப்பு ஏற்பட்டன. தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரியவந்தது.


இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும்குஜராத் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதில்தனியார் தொலைக்காட்சி ஒன்று குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ., 119 முதல் 129 வரையிலும், காங்., 49 முதல் 52 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.மற்றொரு தொலைக்காட்சி, கடந்த 2007ம் தேர்தலில் 117 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ., இந்த முறை 140 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இந்த முறை 46 சதவீத ஓட்டுக்கள் அதிகம் பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்தமுறை 59 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்., இந்த முறை 40 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

மற்றொரு தொலைக்காட்சிவெளியிட்ட கருத்துக்கணிப்பில்,பா.ஜ., 118 முதல் 128 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி50 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.மற்றொரு கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு 116 தொகுதிகளிலும, காங்., 60 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் தொகுதிகளில் மாறுபட்டாலும், பா.ஜ., தான் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம்பா.ஜ., குஜராத்தில்ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில்பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் காங்., வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.காங்கிரசுக்கு 30 முதல் 38 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 27 முதல் 35 தொகுதிகளும்கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு கருத்துக்கணிப்பில்,காங்கிரஸ 40 தொகுதிகளிலும், பா.ஜ., 23 தொகுதிகளிலும்,மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.