தேடல்

காஜல் அகர்வாலை கழட்டி விட்ட அக்ஷய்குமார்!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி விட்ட காஜல் அகர்வால், இதே வேகத்தில் பாலிவுட்டிலும் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்து விட வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார். சில இந்தி படங்களில் நடித்து விட்டபோதும் படங்களின் தோல்வி காரணமாக பரபரப்பான இடத்தை காஜலால் பிடிக்க முடியவில்லை. அதனால் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்.

இந்த நிலையில்தான், தமிழில் விஜய்க்கு ஜோடியாக தான் நடித்த துப்பாக்கி படத்தை இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ரீமேக் செய்கிறார்கள் என்பதை அறிந்ததும் அப்படத்திலும் நடிக்க தீவிரம் காட்டினார். ஆனால் அதற்கு அப்பட டைரக்டர் முருகதாஸ் தலையசைத்தபோதும், படத்தின் நாயகனான அக்ஷய்குமார் காஜலை நிராகரித்து விட்டாராம்.

காரணம் கேட்டபோது, முன்பு என்னுடன் ஸ்பெசல் சாப்பீஸ் என்ற படத்தில் நடித்தபோது, நிறைய கால்சீட் குளறுபடி செய்து விட்டார். அவர் செய்த குழப்பத்தினால் அவஸ்தை எனக்குத்தான் என்று எதிர்ப்பு தெரிவித்த அக்ஷய், காஜலை கழட்டி விடுங்கள் என்று சொல்லி விட்டாராம். அதனால்தான் ஹீரோவுக்கு பிடிக்காத நடிகையை புக் பண்ணினால் பின்னர் அவர் மூலம் தனக்கு பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வரும் என்று சுதாரித்துக்கொண்ட இயக்குனர், இப்போது ப்ரணிதா சோப்ராவை புக் பண்ணியிருக்கிறார். இந்த சேதியறிந்து இப்படியே விட்டால், இந்தி சினிமாவில் தனது பெயர் கெட்டு விடும் என்று அக்ஷய்குமாரை சந்தித்து அவரை கூல் பண்ணுவதற்காக நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம் காஜல் அகர்வால்.

அதேசமயம் நான் இந்தி துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் காஜல் கூறியிருந்தார். ஒருவேளை அவர் அப்படி கூறியதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்குமோ...?!