தேடல்

குடிக்க பணம் தராததால் ஆத்திரம் 98 வயது முதியவர் தீக்குளிப்பு

சென்னை : குடிக்க பணம் தராததால், ஆத்திரமடைந்த,98 வயது முதியவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். கொடுங்கையூர்,

சூழ்புனல்கரை பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர், லாரி நிறுவனம் ஒன்றில் வேலை

பார்த்து வருகிறார். இவரது தந்தை வீரராகவன், 98. மதுவுக்கு அடிமையான இவர்,

தினமும் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதற்காகவே அவரது மகன்

வாசு, தந்தைக்கு, தினமும், 100 ரூபாயை, கொடுத்து வந்தார்.
நேற்று

முன்தினம் வீரராகவனுக்கு, வாசு, பணம் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த

வீரராகவன், மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். வாசு உள்ளிட்டோர், அவரை

மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே

வீரராகவன் பலியானார்.சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார்விசாரிக்கின்றனர்.