தேடல்

கொடுங்கையூரில் 25 சவரன் திருட்டு

சென்னை:கொடுங்கையூரில்

அரசு அதிகாரி வீட்டில், 25 பவுன் நகை மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் திருடி

சென்றனர். அதே பகுதியில், பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய, மர்ம

நபர்கள், மூன்று சவரன் நகையை திருடி சென்றனர்.கொடுங்கையூர், சூழ்புனல்கரை,

அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விக்டர். இவர், அரசு வேளாண் துறை அதிகாரி.

இவரது தம்பி டைட்டர்ஸ். சொந்த வீட்டில், தம்பி மேல் மாடியிலும், அண்ணன்

கீழேயும் வசித்து வருகின்றனர். பொங்கலுக்காக, இருவரும் வீட்டை பூட்டி

விட்டு, காஞ்சிபுரத்திற்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு

திரும்பிய போது, இரண்டு வீடுகளின் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு,

மொத்தம், 25 பவுன் நகை மற்றும் பணம், 55
ஆயிரம் ரூபாய், திருடு

போயின.கைரேகைபோலீசாரின் முதற்கட்ட சோதனையில், மூன்று பேர்களின், கைரேகை

பதிவுகள் கிடைத்தன. அதை வைத்து, போலீசார் திருடர்களை தேடும் பணியில்

ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன், எம்.கே.பி., நகரில் கல்யாண வீட்டுக்கு

சென்றவர் வீட்டிலும், கிருஷ்ணமூர்த்தி நகரில், மாமியார் வீட்டுக்கு

சென்றவர் வீட்டிலும், திருட்டு நடந்தது. அவற்றில் யாரும் சிக்காத நிலையில்,

தற்போது வெளியூர் சென்றிருந்த, அரசு அதிகாரி வீட்டில் திருட்டு சம்பவம்

நடந்துள்ளது.ஓட்டை பிரித்து...கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை

சேர்ந்தவர் ரவிக்குமார், 46; ஓவியர். இவரது மனைவி ராணி, 40. இவர், நேற்று

மதியம், 12.30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். ஒரு மணி

நேரத்திற்கு பின், வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் மேற்கூரை ஓடு

பிரிக்கப்பட்டு இருந்தது.வீட்டின் உள்ளே இருந்த பீரோவில், மூன்றரை சவரன்

சங்கிலி காணாமல் போயிருந்தது. இதுகுறித்தும், கொடுங்கையூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.