தேடல்

காணும் பொங்கல்: எம்.டி.சி.,க்கு ரூ.3 கோடி வருவாய்

சென்னை:பொங்கல்

பண்டிகையின் கடைசி நாளான, காணும் பொங்கல் தினத்தன்று, சென்னை மாநகர

போக்குவரத்து கழகம், மூன்று கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
காணும்

பொங்கலை முன்னிட்டு, பொழுது போக்குக்காக, மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட

கடற்கரை பகுதிகள், வண்டலூர் மிருகக்காட்சி சாலை, திரையரங்குகள் மற்றும்

கோவில்களில் மக்கள் பெருமளவில் குவிந்தனர்.அவர்களின் வசதிக்காக, 3,628

பஸ்களை, மாநகரப் போக்குவரத்து கழகம் இயக்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட

பயணிகள், பயணித்தனர். அதிகாலை முதல் இரவு, 11:00 மணி வரை பொங்கல் சிறப்பு

பஸ்கள் இயக்கப்பட்டன எனவும், மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்து

உள்ளது.மேலும், பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம், 1.62 லட்சம்

ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டது.