தேடல்

குப்பை மாற்று தொழிற்சாலையால் எந்த பாதிப்பும் வராது

சென்னை:கொடுங்கையூர்

கிடங்கில் குப்பை எரிவது போல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமோ என,

மீஞ்சூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குப்பை மாற்று தொழிற்சாலையால் எந்த

பாதிப்பும் வராது என, அவர்களிடம் தெளிவுபடுத்துவோம், என, மாநகராட்சி

தெரிவித்துள்ளது. திட்டத்தை செயல்படுத்த மே மாதத்திற்குள், பணி ஆணை வழங்க

முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரின், குப்பை பிரச்னைக்கு

தீர்வு காண, குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் குப்பை மாற்று

தொழிற்சாலைகள் அமைக்கும்
திட்டத்தை, மாநகராட்சி அறிவித்தது.இடங்கள்

தேர்வுகுப்பை மாற்று தொழிற்சாலைகள் அமைக்க, காஞ்சிபுரம் மலைப்பட்டு - 73.47

ஏக்கர், திருவள்ளூர் மாவட்டத்தில், கூத்தம்பாக்கம் - 99.61 ஏக்கர்,

மீஞ்சூர் - 19.98 ஏக்கர், வல்லூர் - 47.13 ஏக்கர் என, மொத்தம், 240.19

ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த அரசு, ஒப்புதல்

அளித்துள்ளதால், ஒப்பந்தம் கோரும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு

உள்ளது.மீஞ்சூர் பகுதியில், குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, அப்பகுதி

மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும், 31ம் தேதி, ஆர்ப்பாட்டம்

நடத்தவும், தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த

செய்தி, தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது.
பாதிப்பு

வராதுதிட்டத்தால், எந்த பாதிப்பும் வராது என, மக்களிடம் தெளிவுபடுத்த

மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி

ஒருவர் கூறியதாவது:
கொடுங்கையூரில், குப்பை எரிவது போன்ற நிலை வருமோ

என்ற அச்சத்தால், மீஞ்சூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குப்பை மாற்று

தொழிற்சாலை அமைவதால், எந்த பாதிப்பும் வராது.சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்

அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்று தான், திட்டத்தை துவக்க

முடியும். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பொதுமக்களிடம்

பேசி, தெளிவுபடுத்துவோம்.திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, 16

நிறுவனங்களும் பிப்., 7ம் தேதிக்குள், தொழில்நுட்ப ரீதியான விவரங்களை

சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த சந்தேகங்களை விளக்கும் வகையில், இன்று

கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து, அடுத்த மாதத்தில், ஒப்பந்தம்

கோரப்
படும். மே மாதம் முதல் வாரத்திற்குள் பணி ஆணைகள் கொடுக்கவும் முயன்று வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.