தேடல்

குப்பையில் இருந்து மின்சாரம், உரம் தயாரிக்க ஒப்பந்தம் கோரும் நிலைக்கு தயாராகுது மாநகராட்சி

குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் வகையிலான குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதனால், ஒப்பந்தம் கோரும் வகையிலான அடுத்த கட்ட முயற்சிகளில் மாநகராட்சி இறங்கியுள்ளது.சென்னை மாநகராட்சியில் தினமும், 4,600 டன் சேகரமாகும் குப்பை, கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளிலும், விரிவாக்க பகுதிகளில் பல இடங்களிலும் கொட்டப்படுகிறது. குப்பை கையாளப்படும் நடைமுறை சரியாக இல்லாததால், மாநகரம் முழுவதும் கப்பு பிரச்னை பெரிதாக உள்ளது.மாற்று திட்டம்இதற்கு தீர்வு காணும் வகையில்,முன்பு மாநகராட்சி ஆணையராக இருந்த டேவிதார், குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை துவங்கும் முயற்சியில் சிறப்பு கவனம் செலுத்தினார். ஆர்வம் காட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதில், 31 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்து, திட்டத்தை செயல்படுத்த தகுதி வாய்ந்ததாக, 16 நிறுவனங்கள் தேர்வாகின. இதையடுத்து, திட்ட செயலாக்கத்திற்கான ஒப்பந்தம் கோரப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அரசு ஒப்புதல்திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரி, அரசுக்கு மாநகராட்சி அனுப்பிய கருத்துருவுக்கு, நிர்வாக ஒப்புதல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து, கடந்தாண்டு நவ.,18ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், மாநகராட்சி அளித்த ஆவணங்களை ஆய்வு செய்த தமிழக அரசு, திட்டத்தை செயல்படுத்த நிர்வாக ஒப்புதலை, சமீபத்தில் அளித்து உள்ளது.அடுத்த கட்டம்
இதுகுறித்து, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பிரிவு அதிகாரி கூறியதாவது:குப்பை மாற்று தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட, 16 நிறுவனங்களிடமும், திட்டத்தை செயல்படுத்தும் தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறைகள் குறித்த விவரங்களை கோரியுள்ளோம்.
வரும் 18ம் தேதி, இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து, அடுத்த மாதத்தில், ஒப்பந்தம் கோரப்படும். 16 நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்கும்.
இவ்வாறு அவர்
கூறினார்.
திட்ட நிலைகள் விவரம்
டூதினமும், 2,500 டன்னுக்கும் அதிகமான திட கழிவுகளை கையாளும் வகையில், குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த திட கழிவு மேலாண்மை திட்டத்தை நிர்மாணித்தல்.
டூகொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களை சீரமைத்தல்; குறித்த காலத்திற்குள் அவற்றை மூடுதல்.
டூமண்டலங்கள், வார்டுகளில் சாலைகளை சுத்தம் செய்தல், வீடு தோறும் திட கழிவு, குப்பை சேகரித்தல்,
ஒருங்கிணைந்த திட கழிவுகள் பதனிடும் திட்ட வளாகத்திற்கு அவற்றை கொண்டு செல்லுதல்.
என்ற, மூன்று கருத்துரு அடிப்படையில், குப்பை மாற்று திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குப்பை மாற்று திட்டத்தை, 16 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம், என, மேயர் சைதை துரைசாமி கூறினார். இந்த திட்டம், குப்பையால் ஏற்படும் கப்பு பிரச்னைக்கு பெரும் தீர்வாக அமையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
திட்ட நடைமுறை என்ன?
டூநகரின் பல்வேறு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பை, நேரடியாக குப்பை மாற்று தொழிற்சாலை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும்.
டூஉலோகம், பிளாஸ்டிக், காகிதம் ஆகியவை பிரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு விற்கப்படும்.
டூமக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கப்படும்.
டூமக்காத குப்பையுடன் எரிபொருள் சேர்த்து, கலனில் கொட்டி உயர் அழுத்தத்தில் எரிக்கப்படும். அதிலிருந்து வெளியேறும் வெப்ப ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்படும்.
டூஅப்போது, ஒரு வழியில் சாம்பலும், மற்றொரு வழியில் புகையும் வெளியாகும்.
டூபல்வேறு நிலைகளில் நச்சுகள் நீக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் உயர்மட்டத்தில் வெளியேற்றப்படும்.
டூமற்றொரு வழியாக வரும் சாம்பல் மூலம், கட்டுமானத்திற்கான கனமில்லாத தக்கை கற்கள் தயாரிக்கப்படும்.

240 ஏக்கர் இடம்
உடைமை மாற்றம்
குப்பை மாற்று தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, காஞ்சிபுரம் மலைப்பட்டு- 73.47 ஏக்கர், திருவள்ளூர் மாவட்டத்தில், கூத்தம்பாக்கம் - 99.61 ஏக்கர், மீஞ்சூர் - 19.98 ஏக்கர், வள்ளூர் - 47.13 ஏக்கர் என, மொத்தம் 240.19 ஏக்கர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை, மாநகராட்சிக்கு உரிமை மாற்றம் செய்ய கோரி காஞ்சிபுரம், திருவள்ளூர் கலெக்டர்களுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

- நமது நிருபர் -