தேடல்

கும்பாபிஷேகம்

சோழவந்தான்:சோழவந்தான் முதலியார்கோட்டை செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு யாகசாலையில் புனிதநீர் நிரப்பிய குடங்களை வைத்து பல்வேறு பூஜைகள் நடந்தன. பின் காலை9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயில் வந்தனர். வரதராஜபண்டிட் முன்னிலையில் வேதங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.