தேடல்

கார்ப்பரேஷன் வங்கி அதிகாரிகள் சங்க இரண்டு நாள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் துவக்கம்

சென்னை:

கார்ப்பரேஷன் வங்கி அதிகாரிகள் சங்க, 19வது அகில இந்திய கருத்தரங்கம்,

நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.கார்ப்பரேஷன்

வங்கி அதிகாரிகள் சங்க மாநாடு, நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தக

மையத்தில் நேற்று துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, கார்ப்பரேஷன்

வங்கிகளில் பணியாற்றும், மூன்றாயிரம் அதிகாரிகள், இம்மாநாட்டில் கலந்து

கொண்டனர். மாநாட்டின் துவக்க விழா, நேற்று காலை

நடந்தது.புதுமைகள்...வரவேற்பு குழு செயலர், ஸ்ரீதர் வரவேற்றார். சங்க

பொதுச் செயலர், கவுசிக் கோஷ், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து

விளக்கினார்.வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், அஜய்குமார்,

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:வங்கி துறையில், பணி

ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியத்துவமானது. இதில், கார்ப்பரேஷன் வங்கி

அதிகாரிகள் சங்கம், வங்கியின் வளர்ச்சிக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறது.

ஒவ்வொரு தனி நபரின் பொறுப்புணர்வு, புரிந்துணர்வு மட்டுமே நிறுவனத்தின்

வளர்ச்சிக்கு வித்திடும்.மற்ற வங்கிகளை ஒப்பிடும் போது, கார்ப்பரேஷன்

வங்கியின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. இன்னும் வங்கியில் பல புதுமைகளை

புகுத்த வேண்டும். இதற்கு ஒவ்வொரு ஊழியரும் தங்களின் வளர்ச்சிக்கான

திட்டங்களை, பங்களிப்பை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்

பேசினார்.உறுப்பினர்கள் தேர்வு பத்திரிகையாளர் குருமூர்த்தி, வங்கியின்

செயல் இயக்குனர் அமர் லால்டால்டானி, அனைத்திந்திய வங்கிகள் சங்க

கூட்டமைப்பின் பொது செயலர் ரிஷபதாஸ் உள்ளிட்ட பலரும் பேசினர். சங்கத்தின்

முன்னாள் நிர்வாகிகள், வங்கியின் முன்னாள் அதிகாரிகள் பலரும்

கவுரவிக்கப்பட்டனர்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர்

நரேந்திரா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கார்ப்பரேஷன் வங்கி மேலாண்மை

இயக்குனர், அஜய்குமாரை கவுரவித்தார். மாநாடு, இன்றும் தொடர்ந்து நடைபெற

உள்ளது. வங்கியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்து, பல்வேறு

முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சங்க புதிய செயற்குழு உறுப்பினர்கள்

தேர்வு செய்யப்பட உள்ளனர்.