தேடல்

கார் விலை உயர்வு : மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அனைத்து மாடல் கார்களின் விலையும் இன்று முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படுவதாக மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அவர் கூறினார். கடந்த மாதம் மாருதி கார்கள் விலை 1 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டன. ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை விலையிலான பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.