தேடல்

குறைந்த சம்பளத்தால் பரிதவிக்கும் பஸ் ஏஜன்ட்கள்

ராஜபாளையம்:ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டுகளில், ஒரு ரூபாய் பெறும் அரசு ஏஜன்ட்களின் வருமானத்தை, 2.50 காசாக உயர்த்த,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராஜபாளையத்தில் பழைய, புதிய பஸ்
ஸ்டாண்ட்கள் உள்ளன. அரசு பஸ் ஏஜன்ட்கள் 11பேர் பணியில் உள்ளனர். இவர்கள் அந்தந்த ஊர் பஸ்கள் வரும்போது, பயணிகளை அழைப்பர். மாத வருமானம் இல்லை.கண்டக்டர் கொடுக்கும் ஒரு ரூபாய் தான், இவர்களது வருமானம்.
ஷிப்டு முறையில் பணியாற்றும் இவர்களில், ஒருவருக்கு தினமும் நூறு ரூபாய் கிடைக்கிறது.
மதுரை மாட்டுதாவணியில் இதே பணியில் உள்ளவர்களுக்கு, ஒரு பஸ்சுக்கு 2.50காசு கிடைக்கிறது. மற்ற நகர்களில் உள்ள ஏஜன்ட்களுக்கும் வருமானம் உயர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.