தேடல்

கொலம்பியாவி்ல் 9 பேர் சுட்டுக்கொலை

பகூட்டா:கொலம்பியாவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.கொலம்பியாவி்ன் ‌தலைநகர் பகூட்டாவில் வடமேற்கே , அப்பார்ட்மென்ட் ஒன்றில் 4 பெண்கள்,5 ஆண்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.மறுநாள் காலையில் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச்சூட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். தகவல்அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்தும், சுட்டவர்கள் யார் என்பது குறித்தும், இதுவரை போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை.