தேடல்

கால்பந்து ரேங்கிங்: இந்தியா 169

பாரிஸ்:சர்வதேச கால்பந்து ரேங்கிங்கில் இந்திய அணி 169வது இடத்துக்கு தள்ளப்பட்டது.கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் ஒரு இடம் பின்தங்கிய இந்திய அணி 169வது இடத்தை நேபாளத்துடன் பகிர்ந்து கொண்டது. வங்கதேசம் (171வது இடம்), பாகிஸ்தான் (180), இலங்கை (182) அணிகளும் பின்னடைவை சந்தித்தன.முதல் இரண்டு இடங்களில் உலக சாம்பியன் ஸ்பெயின் (1564 புள்ளி), ஜெர்மனி (1421) அணிகள் நீடிக்கின்றன. அர்ஜென்டினா அணி ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்தது. போர்ச்சுகல் அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மூன்று இடங்கள் முன்னேறிய இத்தாலி 5வது இடம் பிடித்தது. இங்கிலாந்து (6வது), நெதர்லாந்து (7வது) அணிகள் தலா ஒரு இடம் பின்தங்கின. கொலம்பியா (8வது), ரஷ்யா (9வது), குரோஷியா (10வது) அணிகள் முன்னேற்றம் கண்டன. பிரேசில் அணி 13வது இடத்துக்கு முன்னேறியது.ஆசிய அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்தியாவுக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. ஆசிய பிரிவில் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலிய அணிகள் டாப்-3 வரிசையில் உள்ளன.