தேடல்

கோலிவுட் நடிகைகளுக்கு ஷாக் கொடுத்த யாமி கெளதம்!

இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்தவர் யாமி கெளதம். அவரை ஜெய் நடிக்கும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்துள்ளனர். அப்படத்தில் அம்மணியின் அசாத்திய பர்பாமென்ஸ் பற்றி கேள்விப்பட்ட அபியும் நானும் இயக்குனரான ராதாமோகனும் தனது கெளரம் படத்துக்கு யாமியை கமிட் பண்ணியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வளரும் படம் என்பதால் செம உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை. அதோடு, மேலும் புதிய படங்களை கைப்பற்றவும் அதிரடி முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இப்படி யாமிகெளதம் எடுத்த முயற்சியினால், அனுஷ்கா, ஹன்சிகா, அஞ்சலி போன்ற நடிகைகளுக்கு செல்லயிருந்த சில படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கிறதாம். இந்த நல்ல சகுனங்களைப்பார்த்து, அடுத்து கோலிவுட்டில் கொடி நாட்டி விட வேண்டியதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் யாமி. ஆனால் இதை கேள்விப்பட்டதில் இருந்து மேற்படி நடிகைகள் மட்டுமின்றி, கோடம்பாக்கத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி வரும் சில நடிகைகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம். ஏற்கனவே யாமி கெளதம் பரீட்சயமான நடிகைதான் என்பதால், இந்த புதிய புயல் தங்களது சினிமா படகை கவிழ்த்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி சில நங்கூரம் பாய்ந்த நடிகர்களின் துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.