தேடல்

கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார்: சிரியா அதிபர் அசாத்

பெய்ரூட்: கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார் என சிரியா அதிபர்

பேட்டியளித்துள்ளார். சிரியாவில் கடந்த 21 ஆண்டுகளாக அந்நாட்டு அதிபர் பசர்

அல்அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி நடந்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க உதவி செய்து வருகிறது. இதுவரை கடந்த

சண்டையில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள்

தெரிவிக்கின்றன.இந்நிலையில் முதன்முதலாக அந்நாட்டு அதிபர் பசர் அல்அசாத் ,

தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ரஷ்ய நாட்டு டி.வி.யில் தோன்றி

உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள

தயார், இவர்கள் அல்கொய்தா அமைப்பினரை போன்று செயல்படுகின்றனர்.

நாட்டினையும்,நாட்டு மக்களையும் காப்பாற்ற , தேசம் எல்லா நிலைகளிலும்

தயாராக உள்ளது. மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அவர்

பேசினார்.