தேடல்

குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் பனிக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.பாரபங்கி மாவட்டத்தில் இருவரும், கோண்டா, தியோரியா, பாலியா பண்டா மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் 6 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை மட்டுமே பதிவாகும் என வானியல் மையம் அறிவித்துள்ளது.குறைந்தபட்சமாக லக்னோ விமான நிலையத்தில் 0.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.