தேடல்

குழந்தை அழுததால் தகராறுஇளம்பெண் தற்கொலை

திருமங்கலம்:குழந்தை

அழுவதை பொருட்படுத்தாமல், உறக்கத்தில் இருந்த மனைவிக்கும், கணவனுக்கும்

இடையே ஏற்பட்ட தகராறால்,மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து

கொண்டார்.அண்ணா நகர் மேற்கு விரிவு, பாடிக்குப்பம், அண்ணா தெருவை

சேர்ந்தவர் ராஜி, 28. இவர்,உறவினர் பெண்ணான, தஞ்சை மாவட்டம்,

பட்டுக்கோட்டையை சேர்ந்த சித்ரா தேவியை, 23, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு

முன், காதலித்துதிருமணம் செய்து கொண்டார். தற்போது, ராஜி -
சித்ராதேவி

தம்பதிக்கு, ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், மனைவி,

குழந்தையோடு, பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ராஜி, கடந்த நான்கு
நாட்களுக்கு

முன், தனிக்குடித்தனம் சென்றார்.இச்சூழலில், நேற்று முன்தினம் இரவு,

ராஜியும்,சித்ராதேவியும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, குழந்தை அழத்

துவங்கியது. அதைபொருட்படுத்தாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தசித்ராதேவியை

எழுப்பி, ராஜி, தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின், இருவரும் உறங்கினர்.
நேற்று

அதிகாலை, ராஜி எழுந்த போது, வீட்டில் உள்ள மற்றொரு அறையின்

மின்விசிறியில், சித்ராதேவி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது

தெரிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற உள்ளது.