தேடல்

"உங்கள் கையில் உங்கள் பணம்' உதவித்திட்டம்

சென்னை:மாணவர் ஊக்கத்தொகை, முதியோர் பென்ஷன் உட்பட, 39 திட்டங்களுக்கான உதவித்தொகை வழங்கும், உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம், அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்; தமிழகமும் இதில் சேர்க்கப்படும் , என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
தமிழக சட்டசபை, முன்னாள் சபாநாயகர், செல்லபாண்டியன் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
என்னைவிட இளையவரான ராகுல் காந்தியை, நாங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம். இந்த பக்குவம், தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் வேண்டும்.
தமிழகத்தில், காங்கிரஸ் மீண்டும் உயிர் பிழைத்து எழவேண்டுமானால், மாவட்ட, வட்டார அளவில், இளைஞர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த புதிய நிர்வாகிகளின் கட்டளையை ஏற்று, நான்செயல்படுவேன்.
மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை, முதியோர் பென்ஷன் உட்பட, 39 திட்டங்களுக்கான, உதவி தொகை, உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம், அவரவர் வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டம், முதல் கட்டமாக, நாடு முழுவதும், 51 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடப்பதால், குஜராத்
மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், எட்டு மாவட்டங்களை தவிர, 43 மாவட்டங்களில், இத்திட்டம், வரும் ஜனவரி, 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
இதுகுறித்து, மாநில அரசு
களுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், தமிழக மாவட்டங்களும் விரைவில்
சேர்க்கப்படும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், அரசு வழங்கும் பணம், அடுத்த விநாடியே, உரியவரின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.
இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
விழாவில், மத்திய அமைச்சர்கள், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் உட்பட பலர் பங்கேற்றனர்.