தேடல்

சக்சஸ் மீட் கேன்சலாச்சுது!

சமீபத்தில் வெளியான சிறுத்தையின் பாண்டி படம் தியேட்டருக்கு போன வேகத்தில் பெட்டிகள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பச்சை ஸ்டூடியோ தயாரிப்பாளர் விளம்பரத்தின் மூலம் படத்தை தூக்கி நிறுத்திக் காட்டுகிறேன் என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு கரன்சிகளை அள்ளி இறைக்கிறாராம். நாடெங்கும் கட்அவுட், பேப்பர் விளம்பரம், 16 பிட்டு போஸ்டர், நிமிடத்துக்கு நிமிடம் டி.வி விளம்பரம் என்று இதுவரை விளம்பரத்துக்கு மட்டும் 4 கோடி செலவு செய்திருக்கிறாராம். அதோடு சக்சஸ் மீட் என்ற பெயரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். எல்லா நிருபர்களுக்கும் செய்தி பறந்தது. என்னது ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்டா என்று நிருபர்கள் புருவதை உயர்த்திய செய்தி படத்தின் ஹீரோயினுக்கும், சிறுத்தைக்கும் சென்றது. பதறிப்போன சிறுத்தை, சித்தப்பு இதெல்லாம் வேணாம் சித்தப்பு, அவிங்க கேள்விகேட்டே கொன்னுடுவாய்ங்க என்று ஜர்க்கானாராம். ஹீரோயினின் சென்னை மானேஜர் ஹீரோயினுக்கு போன் போட்டு மேடம் படத்துல ஹீரோவ கூட விட்டுட்டு தியேட்டர்ல உங்களுக்குதான் நிறைய கமெண்ட் வருதுன்னு தட்டிவிட அலறிய நடிகை சிறுத்தைக்கு போன்போட்டு சாரி எனக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லிட்டாராம். நட்சத்திர ஓட்டலுக்கு சில லட்சங்கள் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் சக்சஸ் மீட் கேன்சலாச்சுது.