தேடல்

சட்டசபையை கலைக்க முண்டா கோரிக்கை

ஜாம்ஷெட்பூர்: குதிரை பேரத்தை தடுக்க, ஜார்க்கண்ட் அரசை கலைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்டில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலக்கிக்கொண்டது. இதையடுத்து, சட்டசபையை கலைக்கும்படி கவர்னரிடம் முண்டா பரிந்துரை செய்தார். ஆனால் ஆட்சி அமைக்க போதுமான உறுப்பினர்கள் தங்களுக்கு இருப்பதால் தங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, சட்டசபை கலைக்கப்படவில்லை. இந்நிலையில், ஜாம்ஷெட்பூரில் நிருபர்களிடம் பேசிய முண்டா, தற்போது ஜார்க்கண்டில் குதிரை பேரம் நடந்து வருவதால், அதை தடுக்க, சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தப்படவேண்டும் என கூறியுள்ளார்.