தேடல்

சப்த கன்னியர் கோவில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை : சப்த கன்னியர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை பூந்தோப்பு அருகில் சப்த கன்னியர் கோவில் கட்டும் பணி முடிவடைந்து, நேற்று காலை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, கணபதி பூஜை, யஜமானசங்கல்பம், கரிகோலம், அங்குரார்பணம், அம்மன் கலாகர்ஷனம், கும்பா ஆராதனம், ஹோமம், பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை விஸ்வரூபம், ஹோமம், ஸ்ரீசப்த கன்னியர் அபிஷேகம், கும்ப புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு
பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பெரியோர்கள் செய்தனர்.