தேடல்

சர்தாரி எங்கும் ஓடி விடவில்லை: உதவியாளர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, அதிபர் சர்தாரி துபாய் சென்று விட்டதாக கூறுவது உண்மையல்ல என அவரது உதவியாளர் பர்ஹத்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, எவ்வித நெருக்கடியையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும், அவர் கராச்சியில் இருந்து கொண்டு பாகிஸ்தான் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பர்ஹத்துல்லா தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அதிபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.