தேடல்

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.83 புள்ளிகள் குறைந்து 19923.78 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.95 புள்ளிகள் குறைந்து 6019.35 புள்ளிகளோடு காணப் பட்டது.இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.04 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.41 புள்ளிகள் குறைந்து 20013.20 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.85 புள்ளிகள் அதிகரித்து 6077.15 புள்ளிகளோடு காணப் பட்டது.