தேடல்

சரிவில் தொடங்கி சரிவுடன் முடிந்தது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.15 புள்ளிகள் குறைந்து 18846.26 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 21.35 புள்ளிகள் குறைந்து 5738.75 புள்ளிகளோடு காணப் பட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்டீஸ், இன்போசிஸ் உ.ள்ளிட்ட 20 நிறுவனப்பங்குகள் சரிந்து காணப்பட்டன. மீதமுள்ள 10 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் காணப்பட்டன.