தேடல்

சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம்?

சென்னை

: சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், உணவு

பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலருக்கே உள்ளது. புகார்களைமாநகராட்சி,

அவர்களுக்கு பரிந்துரை செய்யும் என, மேயர் தெரிவித்தார். சென்னை

மாநகராட்சி கூட்டத்தில், சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள், பாதுகாக்கப்பட்ட

குடிநீர் என, விற்கப்படுவதுபனை செய்வது புற்றீசல் போல் பெருகிவிட்டது.

இதில், மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா, என, மண்டலக்குழு தலைவர் தனரமேஷ்

கேள்வி எழுப்பினார். மேயர் சைதை துரைசாமி பதில் அளித்துபேசியதாவது:
கோட்ட

அளவில், சுகாதார ஆய்வாளர்கள் கள ஆய்வின்போது, குடிநீர் பாக்கெட், குடிநீர்

பாட்டில், குடிநீர் கேன்களை பரிசோதிக்கின்றனர். ஐ.எஸ்.ஐ., சான்று,

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, குளோரின் அளவை கண்காணித்து, சரியாக இல்லாத

பட்சத்தில், அவற்றை பறிமுதல் செய்து அழித்து, அபராதம் விதிக்கின்றனர்.

தற்போது, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம்

நடைமுறையில் உள்ளது. இதன்படி, தரமற்ற குடிநீர் விற்போர் மீது நடவடிக்கை

எடுக்கும் அதிகாரம், மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு

அலுவலருக்கே தரப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து தரமற்ற குடிநீர் பற்றிய

புகார்கள் பெறப்படும்போது, மேற்சொன்னஅலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க,

மாநகராட்சி சுகாதார துறை பரிந்துரை செய்கிறது.இதுபற்றிய புகார்களை

கவுன்சிலர்கள், பொதுமக்கள் சம்பந்தபட்ட உணவு பாதுகாப்பு துறை

அதிகாரிகளுக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மேயர் கூறினார்.