தேடல்

சிங்கப்பூரில் இந்தியர் மரணம்

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி இந்திய இஞ்ஜினியர் மரணமடைந்தார். சிங்கப்பூரின் பிரபல கட்டுமான நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இஞ்ஜினியராக பணியாற்றுபவர் தர்மலிங்கம் செல்வம் (32), இவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருநதார். கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஜீராங் தீவுப் பகுதியில், அவரது நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் பைப் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தர்மலிங்கம் செல்வம் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.