தேடல்

சென்னை கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி

சென்னை: சென்னையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் தடுமாறியது. கேப்டன் தோனி பொறுப்பாக விளையாடி சதமடிக்க, 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. ரெய்னா 43 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாக்., சார்பில் நஷீர் ஜாம்ஷெத் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.