தேடல்

சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வு: மார்ச் 5ல் துவக்கம்

சென்னை : சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 5ம் தேதி துவங்கி, 28ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் மட்டும், மாநில அளவில், பொது
தேர்வாக நடக்கின்றன. இதர வகுப்பு தேர்வுகள், அந்தந்த மாவட்ட அளவில், பொது தேர்வாக நடக்கின்றன. அதன்படி, சென்னை மாவட்டத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச்,
5ல்

துவங்கி, 28ம் தேதி முடியும். அனைத்து தேர்வுகளும், பிற்பகல், 1:30க்கு

துவங்கி, 4:30க்கு முடிவடையும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,

ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

தேர்வு அட்டவணை
தேதிதேர்வு பாடம்
5.3.13மொழி முதல் தாள்
8.3.13மொழி தாள் இரண்டு
12.3.13ஆங்கிலம் முதல் தாள்
13.3.13ஆங்கிலம் இரண்டாம் தாள்
16.3.13புவியியல்
19.3.13இயற்பியல், பொருளியல்
20.3.13கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல், புள்ளியியல்
22.3.13வேதியியல், கணக்கு பதிவியல்
26.3.13வரலாறு, கணிதம், வணிக கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்
28.3.13உயிரியல், தாவரவியல், வணிகவியல்