தேடல்

சினிமாவில் ஜெயிக்க எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன்- மேக்னாராஜ்!

கே.பாலசந்தரின் கவிதாலயா பேனரில் கிருஷ்ணலீலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் மேக்னாராஜ். ஆனால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அடுத்தபடியாக அவர் நடித்த காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்கள் திரைக்கு வந்து விட்டன. தற்போது நிமிர்ந்து நில், கள்ளச்சிரிப்பழகா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் அடுத்த நயன்தாரா என்று பேசப்பட்ட மேக்னாராஜ் இன்னமும் ஒரு வெற்றிபடத்தைகூட சந்திக்கவில்லை. அதனால் அவரது மார்க்கெட் மந்தமான நிலையிலேயே இருக்கிறது.

இந்த நிலையில், சினிமாவில் வெற்றி கதாநாயகியாக இடம் பிடிப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தான் தயாராக இருப்பதாக பரபரப்பு செய்தி வெளியிட்டிருக்கிறார் மேக்னராஜ். அதாவது, எத்தனை கடினமான கதை, ரிஸ்க்கான காட்சிகள் என்றாலும் தயங்காமல் நடிப்பேன் என்று சொல்லும் அவர், கிளாமரில்கூட பெரிதாக கட்டுப்பாடு விதிக்கப்போவதில்லையாம். கதைக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த கவர்ச்சியை தாராளமாக வெளிப்படுத்துவாராம். அதனால் என்னை புரிந்து கொண்டு சரியான வேடங்களுக்கு பயன்படுத்துங்கள் என்றும் கோலிவுட் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார் மேக்னாராஜ்.