தேடல்

சோனியா உருவ பொம்மை எரிப்பு டி.ஜி.பி.,யிடம் இளைஞர் காங்., புகார்

சென்னை:பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, போலீசார் வேடிக்கை பார்க்கும் நிலை நீடித்தால், காவல் நிலையங்கள் முன், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, இளைஞர் காங்கிரசார்
தெரிவித்தனர்.
சமீபத்தில், டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில்பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, தன்னை பேச அனுமதிக்காமல், மத்திய அரசு அவ
மரியாதை செய்துவிட்டது என, குற்றம்சாட்டினார்.
இதை தொடர்ந்து, பிரதமர் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை எரித்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்
இது தொடர்பாக,தமிழக இளைஞர் காங்., தலைவர்யுவராஜ் தலைமையில்,டி.ஜி.பி., ராமானுஜத்
திடம் நேற்று அளிக்கப்பட்ட மனு விவரம்:
டில்லியில் தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில்
பங்கேற்ற முதல்வர், அந்த கூட்டத்தின் மரபை மீறி செயல்பட்டது, தமிழகத்திற்கு தலைக்குனிவை
ஏற்படுத்தியுள்ளது.
இதை அரசியலாக்கும் நோக்கத்துடன், அ.தி.மு.க.,வினர், பிரதமர் மன்மோகன், சேனியாவின் உருவ பொம்மைகளை எரித்து வருகின்றனர். இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கைப்பார்த்து வருகின்றனர். உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.