தேடல்

சீனாவின் அச்சுறுத்தல் : அந்தோணி கவலை

பெங்களூரு :மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.

பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக,இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது
இருந்தாலும், இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை. தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை, அரசு உணர்ந்துள்ளது.எனவே, நம் நாட்டின் பாதுகாப்பை, மேலும் பலப்படுத்துவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்தோணி கூறினார்.