தேடல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி தோல்வி

மான்செஸ்டர்:சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கடைசி லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வி அடைந்தது.ஐரோப்பிய உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 58வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் ரியல் மாட்ரிட், ஏ.சி., மிலன் உள்ளிட்ட 32 அணிகள் எட்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.ஜெர்மனியில் உள்ள டார்ட்மண்ட் நகரில் நடந்த டி பிரிவு கடைசி லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, பொரூசியா டார்ட்மண்ட் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய டார்ட்மண்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு டி பிரிவு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியை தோற்கடித்தது. லீக் சுற்றின் முடிவில் டி பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த டார்ட்மண்ட் (14 புள்ளி), ரியல் மாட்ரிட் (11 புள்ளி) அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின. அஜாக்ஸ் (4 புள்ளி), மான்செஸ்டர் சிட்டி (3 புள்ளி) வெளியேறின.