தேடல்

சாய்பாபாவிற்கு தங்க குடம் காணிக்கை

ஷீரடி : ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர் ஒருவர் ஒரு கிலோ தங்கத்தால் ஆன தங்க குடம் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். டில்லியைச் சேர்ந்த அந்த பக்தர் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த தங்கம் குடம் நாள்தோறும் சாய்பாபாவின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோயிலுக்கு அரை கிலோ தங்கத்தால் ஆன விளக்கை காணிக்கையாக அளித்துள்ளார்.