தேடல்

செய்தித்துறைக்கு தனி இணைய தளம் துவக்கம்

சென்னை: தமிழக செய்தி, விளம்பரத்துறை தொடர்பான புதிய இணைய தளத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி ‌வைத்தார்.தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்காக (டி.ஐ.பி.ஆர்) பிரத்யேக புதிய இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா இன்று நடந்தது. இதனை முதல்வர் ‌ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகள்,மற்றும் செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இந்த இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.www.tndipr.gov.in என்ற பெயரில் இந்த இணைய தளம்இன்று துவக்கப்பட்டுள்ளது.