தேடல்

சிறைக்குள் மொபைல் போன்

மதுரை:மதுரை மத்திய சிறைக்குள் மொபைல் போன், சிம்கார்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு பைக்கில் சென்ற மர்ம நபர்கள் இருவர், சிறைக்கு வெளியில் இருந்தபடி சிறை மூன்றாம் தொகுதிக்குள் பார்சல் ஒன்றை வீசி விட்டு தப்பினர். திடீர்நகரை சேர்ந்த தக்காளி பாபு எடுக்கும்போது, சிறைக்காவலர்கள் பார்த்தனர். பார்சலில் மொபைல் போன், சிம்கார்டு இருந்தது. சிறை அலுவலர் அமிர்தலால் புகார்படி, பாபு மீது கரிமேடு போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். பைக்கில் தப்பிய இருவரை தேடுகின்றனர்.