தேடல்

சாலமன் தீவில் நிலநடுக்கம் : 5 பேர் பலி

ஹோனியாரா: பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தையொட்டி, கடலில் எழுந்த ராட்சத அலைகளால் அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் திரும்பப் பெறப்பட்டது. இச்சம்பவத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ள நிலையில், பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.