தேடல்

சோழவந்தானில் பைக் திருடர்கள் கைது

சோழவந்தான்: மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பைக்திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்த சின்னராஜா என்ற காளை, தினேஷ்குமார், பாலமுருகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 17 பைக்குகள், ஒரு டாடா சுமோ கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.