தேடல்

சேவல் சூதாட்டம் 4 பேர் அதிரடி கைது

சங்ககிரி: சங்ககிரி அருகே லயாமரத்துக் காட்டு பகுதியில், சேவல் வைத்து சூதாடுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, நாகிசெட்டிப்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் பிரகாஷ், 29, அன்பழகன் மகன் கதிரேசன், 33, பெருமாள் மகன் சுப்பிரமணி, 55, ரமேஷ், 23, ஆகியோர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், சூதாட்டத்தில் பயன்படுத்திய, 1,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.