தேடல்

சேவையில் சளைக்காதவர்களுக்கு "சி.எம்.ஏ., விருதுகள்'

குன்னூர் : பொது சேவை, கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு குன்னூர்

வியாபாரிகள் சங்கத்தின் விருதுகள் வழங்கப்பட்டன.குன்னூர் வியாபாரிகள்

சங்கத்தின், 10வது ஆண்டு "சி.எம்.ஏ., விருதுகள்' வழங்கும் விழா குன்னூர்

ஜான் பங்கு மண்டபத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேயிலை

வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் விருதுகள் வழங்கி பேசுகையில்,

""வியாபாரிகள் தங்களது பணியை சேவையாக கருதி செயல்பட வேண்டும். தேயிலை

தூளில் கலப்படம் செய்து விற்பதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

பொது நல

சேவையில் சிறந்து விளங்கியதற்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்.,

ஒருங்கிணைப்பாளர் அழகர் ராமானுஜம், குன்னூர் "ஒய்ஸ்மென்' கிளப் முன்னாள்

தலைவர் ஜெயராமன், குன்னூர் ஜேசிஐ தலைவர் செந்தில்குமார், ஊட்டி சரஸ்

அறக்கட்டளை செயலர் வசந்தகுமாரி, கூடலூர் "கூடு' அறக்கட்டளை நிர்வாகி சன்னி

உட்பட 17 பேருக்கும், கல்வி சேவையில் குன்னூர் புல்மோர் பள்ளி தாளாளர்

புல்மோர், சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக அருவங்காடு கார்டைட் பள்ளி

ஆசிரியர் ராஜூ, அதிகளவு சுய உதவிக் குழுக்களை பராமரித்து வரும் "சிட்சா'

அமைப்பு, நுகர்வோர் சேவையில் கோத்தகிரி புளுமவுண்டன் பாதுகாப்பு குழு

செயலர் ராஜன், 14 வயதுக்குட்பட்ட சிறந்த இந்திய ஹாக்கி வீரர் சில்வஸ்டர்

ஸ்டாலின் உட்பட 10, 12ம் வகுப்பு, பல்கலை அளவில் முதல் மூன்று மதிப்பெண்

பெற்ற, வியாபாரிகள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளில் கல்வியில் சிறந்து

விளங்குவோர் உட்பட 75 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், சங்க

தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். குன்னூர் வியாபாரிகள் சங்க பொருளாளர்

ஜான், துணைத் தலைவர் சார்லி, துணை செயலர் சப்தர் உசேன், சர்வதேச மனித

உரிமைகள் கழக மாநில நிர்வாகி டாக்டர். சலீம், சமூக ஆர்வலர் உஷா

பிராங்கிளின் உட்பட பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர். வியாபாரிகள் சங்க

செயலர் ரகீம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சங்க துணை செயலர்

இஸ்மாயில் நன்றி கூறினார்.