தேடல்

ஜந்தர் மந்தரில் போலீசார் மாணவர்கள் மோதல்

புதுடில்லி: மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்ககோரி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.