தேடல்

ஜெயலலிதாவுக்கு தேசிய மகளிர் கமிஷன் பாராட்டு

புதுடில்லி: கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்துக்கு தேசிய மகளிர் கமிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களிடம் பேசிய கமிஷன் தலைவர் மம்தா சர்மா, கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்து மிகவும் சிறந்த முடிவு. மேலும், இத்தகைய குற்றங்கள் செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகளிர் விரைவு கோர்ட்டுகளை அதிகப்படுத்துவது, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை ஆகியவை குற்றங்கள் குறைய வழிவகுக்கும். இவ்வாறு மம்தா சர்மா தெரிவித்தார்.