தேடல்

"டவேரா' காரில் திடீர் தீ விபத்து கண்ணாடிகள் வெடித்து சிதறின

சென்னை:பழுதுபார்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்ட டவேரா கார் ஒன்று, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. வெப்பம் தாளாமல் கார் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
மாத்தூர், எம்.எம்.டி.ஏ., காலனி, எல்.ஐ.சி., ஐ பிளாக்கில் வசிப்பவர் மணிகண்டன்,32. இவரது டவேரா கார் பழுதானதால், மணலி லம்பைமேட்டில் உள்ள பழுதுபார்க்கும் இடத்தில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
கார் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால், வெப்பம் தாளாமல் கதவு மற்றும் முகப்பு கண்ணாடிகள், வெடித்து சிதறின. இதில், கார் முழுவதும் எரிந்து நாசமானது. காலையில் ஷெட்டை திறக்க வந்த மெக்கானிக், கார் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், மணலி போலீசார் வழக்கு பதிந்து, மின்குறுக்கீடு காரணமாக, கார் தீப்பிடித்து எரிந்தது, விசாரணயில் தெரியவந்தது.