தேடல்

"தாட்கோ' திட்டங்களில் பயன் பெற விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும், பொருளாதார

மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகிறது.
தாட்கோ மூலம் நிலம் வாங்குதல் மற்றும் மேம்படுத்தல்,

தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை

வாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீஸல், காஸ் சில்லறை

விற்பனை நிலையம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதல வழங்கல்,

மகளிர் குழுக்களுக்கு பொருளாதார கடன் வழங்கல், துரித மின் இணைப்பு திட்டம்,

விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமை பணி முதன்மை தேர்வு

எழுதுவோருக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றியும்

விண்ணப்பிக்க வேண்டிய தகுதி குறித்தும், தாட்கோ இணையதளத்தில்

வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதளத்துக்கு

சென்று ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அக்டோபர் 10ம் தேதிக்குள்

விண்ணப்பிக்க வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் ரேஷன்

கார்டு எண், ஜாதி சான்று, வருமான சான்று இவற்றின் எண் மற்றும் நாள்,

தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கான மின் பகிர்மான அட்டை எண்,

திட்டத்துக்கான விலைப்பள்ளி, கல்வி தகுதிக்கான சான்று உள்ளிட்ட விபரங்களை

விண்ணப்த்துடன் அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புவோர் ஹிந்து ஆதி

திராவிடர்களாக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க

வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு திட்டமான பெட்ரோல், டீஸல், காஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க,

குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்ச ரூபாய் வரையில் இருக்க

வேண்டும்.விண்ணப்பதாரரணகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து

விண்ணப்பிக்கவும், இருந்த இடத்தில் இருந்து தங்கள் விண்ணப்ப நிலையினை

தெரிந்து கொள்ள ஆன்லைன் விண்ணப்பம் உதவியாக இருக்கும். மேலம் விண்ணப்பங்களை

பெறுவதற்கு சமர்பிக்க தாட்கோ அலுவலகம் செல்ல தேவையில்லை.
விண்ணப்பித்தில்

குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சரிபார்க்க, மாவட்ட மேலாளரிடமிருந்து அழைப்பு

கடிதம் வந்த பின்னர் கொண்டு வந்தால் போதுமானது. தகுதி வாய்ந்தவர்கள்

விண்ணப்பித்து பயன் பெற கலெக்டர் லில்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.